இடாலோ கால்வினோ
ஆங்கிலத்தில்: Tim Parks
தமிழில்: ஆர். சிவகுமார்
புகழ்பெற்ற பண்டூரியா நாட்டில், ராணுவ செல்வாக்குக்கு எதிரான கருத்துகளைப் புத்தகங்கள் கொண்டிருந்தன என்கிற சந்தேகம், ஒரு நாள், ராணுவ உயர் அதிகாரிகளின் மனங்களில் உண்டானது. தவறுகளைச் செய்யவும் அழிவை உண்டாக்கவும் ஆன இயல்புடைய நபர்களே படைத்தலைவர்கள் என்பதாகவும் மகத்தான வெற்றியை ஈட்டித்தரும் குதிரைப்படைத் தாக்குதல்களாக யுத்தங்கள் எல்லா நேரத்திலும் இருப்பதில்லை என்பதாகவும் ஒரு பரவலான மனப்பாங்கை பெரும்பாலான பழைய, நவீன, வெளிநாட்டு மற்றும் பண்டூரியா நாட்டுப் புத்தகங்கள் கொண்டிருந்ததாக சோதனைகளும் விசாரணைகளும் வெளிப்படுத்தினநிலைமையை ஆராய ராணுவ உயர் அதிகாரிகள் கூடினார்கள். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை; ஏனென்றால் அவர்களில் எவருக்கும் புத்தகங்களைப் பட்டியலிடுகிற அறிவு கிடையாது. கண்டிப்பும் நேர்மை உணர்வும் கொண்ட ஜெனரல் ஃபெடினாவின் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் நிறுவப்பட்டது. பண்டூரியா நாட்டின் ஆகப்பெரிய நூலகத்தின் எல்லாப் புத்தகங்களையும் விசாரணைக் கமிஷன் ஆராய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
தூண்களும் படிக்கட்டுகளும் நிரம்பிய ஒரு பழைய கட்டடத்தில் நூலகம் இருந்தது; அதன் சுவர்கள் காரை பெயர்ந்தும், அங்குமிங்கும் பொடிந்துகொண்டும் இருந்தன. குளிர்ச்சிமிக்க அறைகள் புத்தகங்களால் நிரம்பிப் பிதுங்கி வழிந்தன; சில பகுதிகள் அணுகமுடியாதவையாக இருந்தன. சில மூலைகளுக்கு சுண்டெலிகளால் மட்டுமே போகமுடியும். ராணுவத்துக்கு ஆகும் செலவுகளின் பளுவால் திணறிக்கொண்டிருந்த பண்டூரியாவின் நிதித்துறையால் நூலகத்துக்கு எவ்வித உதவியும் அளிக்க முடியவில்லை.
Add Comment