எங்களுடைய ப்ராஜக்டில் வேலை பார்க்கும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் அவன். திடீரென அவசர சொந்தப் பிரச்னை என்று விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த கிராமத்துக்குப் போனவன் ஒரு வாரமாகத் திரும்பவேயில்லை. என்னவென்று விசாரிக்க அழைத்தபோது அவன் தந்தையார், தான் அத்தனை வருடம் சேர்த்து வைத்த சேமிப்பை ஒரு ஆன்லைன் மோசடியில் இழந்துவிட்டதாகவும் அதை திரும்பப் பெறுவதற்கான முனைப்புகளில் இருப்பதாகவும் சொன்னான்.
கேள்விப்பட்டவுடனேயே ஆச்சர்யமாக இருந்தது. காரணம்…. அவன் பெற்றோரிடம் ஸ்மார்ட்ஃபோன்கூடக் கிடையாது. இவன் வாங்கித் தருவதாக வலியுறுத்தியபோது கூட அலைபேசியிலெல்லாம் அவ்வளவு முதலீடு செய்யக்கூடாது என்று அவர்கள் சொன்னதைப் பகிர்ந்திருக்கிறான்.
அப்படிச் சிக்கனமாகவும், தொழில்நுட்பங்களுக்கு முகம் காட்டாதவர்களாகவும் வாழ்ந்தவர்களிடம் எப்படி ஆன்லைன் மோசடி சாத்தியமாகியிருக்கும்?
ஆகியிருக்கிறது. தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தின் கட்மூர் என்ற அந்தக் கிராமத்தில் ஸ்மார்ட்ஃபோன், இண்டர்நெட் கனெக்ஷன் ஏதும் இல்லாத இதுபோன்ற பல மக்களும் தங்களின் பணத்தை இழந்து தவித்திருக்கிறார்கள்.
Add Comment