Home » பௌத்த விகாரபுரம்
சுற்றுலா

பௌத்த விகாரபுரம்

அநுராதபுரம் இலங்கையின் முதல் நகரம். பாரம்பரிய வரலாற்று நிலம். இப்பொழுது புனித பூமியாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த பூமிக்கு ஒரு அழகிய வரலாற்றை மகாவம்சம் சொல்கிறது. தென்னிந்தியாவை சேர்ந்த இளவரசன் விஜயன் மிகவும் துர்நடத்தை கொண்ட இளவரசனாக காணப்பட்டிருக்கிறான் எனவும், அவனையும் அவனது 700 நண்பர்களையும் அவனது தந்தை நாடு கடத்துகிறார். அவர்கள் வந்த கப்பல் பெயர் அறியாத ஒரு தீவில் கரையொதுங்குகிறது. அதுதான் இலங்கை தீவு. அவனும் அவனது தோழர்களும் இந்த தீவின் நீர்நிலைகளை மையப்படுத்தி குடியேற்றங்களை அமைக்கின்றனர். அப்படி அவனது தோழர்களில் ஒருவரான அனுராத என்பவனால் உருவாக்கப்பட்ட குடியேற்றமே அநுராதகம. கம என்பது சிங்கள மொழியில் கிராமம். பண்டுகாபய மன்னன் இலங்கை வரலாற்றில் மன்னனாக வருகிறான். அவன்தான் வரலாற்றில் இலங்கையில் முதல் திட்டமிட்ட நகரினையும் உருவாக்குகிறான். அதுவே அநுராதபுர நகரம். கி.பி.10 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் தென்னிந்திய படையெடுப்பு நிகழும் வரை அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்யப்படுகிறது. பின்னர் பொலனறுவை தலைநகராக்கப்படுகிறது. அதுவரை காலமும் அநுராதபுரம் பௌத்த பூமியாக உருவாகியிருக்கிறது. இதன் வரலாறு கிறிஸ்துவின் பிறப்புக்கெல்லாம் முந்தியது. இந்தியாவில் சில மாநிலங்களையும், நகர்களையும் கோவில்களின் தேசமென அழைப்பார்கள். இலங்கையில், இல்லை உலகத்தில் பௌத்த மடாலயங்களின் தேசமென ஒன்று இருக்கின்றதென்றால் அது அநுராதபுர நகரம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வானளாவிய தூபிகள் நிறைந்த நகரமது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!