டோக்கியோவில் உள்ள ஒரு கல்லூரியில் சீனாவின் ஜாக் மா (அலிபாபா நிறுவனர்) வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்கிறார் என்கிற செய்தி கடந்த வாரம் பல வர்த்தகப் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைத்திருந்தன. மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவி, வளர்த்து, உலகப் பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக்கிய ஒருவர் பாடம் சொல்லித்தரப் போகிறார் என்றால் அம்மாணவர்களுக்கு அது எத்தகையதொரு அதிர்ஷ்டம்!
அலிபாபா என்றவுடனேயே நாற்பது திருடர்களும் கூடவே நினைவுக்கு வருவர். இப்போதெல்லாம் சீனாவும் சேர்ந்து நினைவுக்கு வருகிறது- ஆப்பிள் என்றவுடன் அலைபேசியும் மனக்கண்ணில் தோன்றுவது போல. அமேசான், கூகுள் பே போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் வேர்விட்டு வலுவாக நின்றிருக்கின்றன- சீனாவைத் தவிர. அங்கெல்லாம் அலிபாபா, அலி-பே தான்.
Add Comment