பகுதி 2
வெடித்துச் சிதறிய ராக்கெட் ஏவுதலை வெற்றி என்று கொண்டாடுவது ஏன்? இந்தக் கேள்விக்கு எலான் மஸ்க் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.
“ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கும் டிராகன் விண்கலத்திற்கும் நேரெதிரான சோதனை வழிமுறைகளை நாங்கள் கையாண்டு வருகிறோம். டிராகனைப் பொறுத்த வரை எந்த விதமான பலவீனத்திற்கும் இடமே கிடையாது. ஆனால் தாமதமில்லாமலும் முழுதாகவும் மீள்பயன் செய்யக் கூடிய ராக்கெட்டைத் தயாரிப்பது திரும்பத் திரும்பச் சோதனைகள் செய்து அதனால் உணரும் பாடங்களை அடுத்த முறை சரி செய்தலின் மூலமே முடியும். அதைத்தான் நாங்கள் ஸ்டார்ஷிப் ராக்கெட்டைப் பொறுத்த வரை செய்கிறோம். எங்கள் பால்கன் ராக்கெட் இந்த இரண்டு வழிமுறைகளுக்கு நடுவே உள்ளது. அதில் ஏறுமுகத்தில் எந்தக் கோளாறும் கூடாது ஆனால் இறங்கும் பொழுது குறைபாடுகள் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து சரி செய்வோம்” என்கிறார் எலான் மஸ்க்.
Add Comment