சாதத் ஹசன் மண்டோ
தமிழில்: எம்.எஸ் / டி.ஏ. சீனிவாசன் (அச்சுதன் அடுக்கா)
அந்தச் சிறப்பு ரயில் பிற்பகல் இரண்டு மணிக்கு அமிர்தசரஸிலிருந்து கிளம்பி எட்டு மணி நேரத்திற்குப்பின் லாகூரிலுள்ள மொகல்புராவிற்கு வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் பலர் காயமுற்றிருந்தனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதது.
மறுநாள் காலை பத்து மணிக்குத்தான் சிராஜுதீனுக்கு நினைவு திரும்பியது. அவர் வெட்டாந் தரையில் கிடந்தார். சுற்றிலும் கூச்சலிட்டபடி ஆண்கள் பெண்கள் குழந்தைகள். அவருக்கு எதுவும் புரியவில்லை.
புழுதி ஏறியிருந்த ஆகாயத்தை வெறித்தபடி அவர் சலனமின்றிக் கிடந்தார். அங்கு நிலவும் குழப்பத்தையோ கூச்சலையோ அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. புதிதாக அவரைப் பார்க்கும் ஒருவனுக்கு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கும் முதியவராக அவர் தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அதல பாதாளத்தின்மேல் தொங்கவிடப்பட்டவரைப் போல் அவர் அதிர்ச்சியிலிருந்தார்.
விமலாதித்த மல்லனுக்கு ஒரு சல்யூட். இதை விட நுணுக்கமாக இந்தக் கதையைப் பற்றி எழுத முடியாது.
கதை? பா.ரா. முகநூலில் குறிப்பாகச் சொன்னது உண்மைதான். குறைந்த வார்த்தைகள் ஆனாலும் ‘உலுக்கி விட்டது’.
😭😭😭😭😭😭😭