Home » Home 10-05-2023

வணக்கம்

தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகி பெரும்பாலான காட்சிகளில் காதுக்கு மேலே ஒரு முழம் பூவை வைத்துக்கொண்டு வருகிறார். அவர் அப்பாவி அல்லது மதராஸி அல்லது இந்து என்பதற்கான குறியீடாக இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அந்தப் பூ பார்வையாளர்கள் காதுக்கு இடம் மாறிவிடும். இந்தப் படம் முஸ்லீம்களுக்கு எதிராக இருக்கிறது என்பது மிகத் தட்டையான புரிதல். ஒட்டுமொத்த தென்னிந்தியப் பெண்களை மிக மட்டமாக சித்தரிக்கிறது படம். தமிழ்ப்படங்களில் வரும் லூசுப் பெண் ஹீரோயின் கேரக்டர்கள் எல்லாம் இவர்களிடம் போட்டிக்கே வரமுடியாது. வேற லெவல் முட்டாள்கள் இவர்கள்.

நர்சிங் கல்லூரியில் பயில வருகிறார்கள் மூன்று பெண்கள். இரண்டு பேர் இந்துக்கள். ஒரு பெண் கிறித்துவர். இவர்களுடன் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் நான்காவாது பெண் முஸ்லீம். இந்த முஸ்லீம் பெண் பெரிய தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர். குண்டு வைக்கும் தீவிரவாதிகள் இல்லை இவர்கள். வயசுப் பையன்களை வேலைக்கு வைத்து பெண்களைக் காதலிக்க வைத்து மதமாற்றும் தீவிரவாதிகள். முஸ்லீம் பெண் தொழுவார், ஓட்டலுக்குத் தோழிகளுடன் சென்று சாப்பிடுவார். ஆனால் மற்ற மூன்று பெண்களும் முஸ்லீம் பெண்ணின் உறவுக்காரப் பையன்களுடன் டிஸ்கோவில் நடனமாடுவது, குடிப்பது, மால்களில் சுற்றுவது என்று இருப்பார்கள். ஒருநாள் சில பொறுக்கிகள் இந்தப் பெண்களின் டாப்ஸ் கையைக் கிழித்து சிலீவ்லெஸ் ஆக்கி அவமானப்படுத்திவிடுகிறார்கள். இந்தப் பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்த நிலை வராது என்பார் முஸ்லீம் தோழி. ஹிஜாப் அணிந்தால் பள்ளிக்கே போக முடியாது என்ற நிலையில் இந்த இந்துப் பெண்கள் மாலுக்குச் சுதந்திரமாகச் செல்வதற்காக அதை மாட்டிக்கொள்கிறார்கள்.

ஹிஜாபுடன் சுதந்திரமாக முஸ்லீம் பையன்களுடன் ஊர் சுற்றுகிறார்கள். உடலுறவு கொள்கிறார்கள். அதனால் கர்ப்பமாகிறாள் நாயகி. காதலால் அல்ல, கர்ப்பமானதால் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். அநேகமாக புர்கா மாட்டினால் கர்ப்பத்தை மறைக்கலாம் என்பது ஐடியாவாக இருக்கும். அதற்கு ஒரு நைட்டி வாங்கி இருக்கலாம். ஆனால் இந்தப் பெண் மதம் மாறி கல்யாணம் செய்துகொள்கிறாள். இதற்கெல்லாம் லவ் ஜிகாத் எனும் பெயரே செல்லாது. சேர்த்துவைக்கிறேன் என்று சொல்லும் அப்பாவி இந்து அம்மாவுடன் போகாமல் அந்தப் பையனுடன் ஆஃப்கனிஸ்தான் போகிறாள்.

இன்னொரு இந்துப் பெண்ணின் அப்பா கம்யூனிஸ்ட். அதனால் கையில் பெரிய புத்தகத்துடன் இருப்பார். இந்தப் பெண்ணின் நிர்வாணப புகைப்படம் வெளியானதால் தற்கொலை செய்து கொள்கிறாள். கிறித்துவப் பெண், முஸ்லீம் பையன்களால் ரேப் செய்யப்படுகிறாள். மற்ற இரு பெண்களையும் எச்சரிக்கை செய்யாமல் அந்த கெட்டவர்களிடம் விட்டுவிட்டு கிளம்பி வீட்டுக்குப் போய்விடுகிறார். ஆஃப்கன் சென்றவள் அங்கு குழந்தை பெற்று பலரால் ரேப் செய்யப்பட்டு தப்பித்து போலீஸிடம் பிடிபட்டு சிறை செல்கிறாள். அத்துடன் படம் முடிகிறது.

வீட்டை விட்டு வெளியில் வந்தால் ஆபத்து என பயமுறுத்தி, பெண்களை வீட்டில் அடைக்கப் பார்க்கிறார்கள். கூடவே பெண்களை வளர்க்கத் தெரியாத பெற்றோர்களாக இந்துக்கள் அனைவரையும் அசிங்கப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

(மூன்று பேரை முப்பத்திரண்டாயிரம் பேர் ஆக்குவது எப்படி? - தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் முழு விமரிசனத்தை மேலே படிக்கக் கீழே செல்லவும்.)

நம்மைச் சுற்றி

நம் குரல்

உறவும் உட்பொருளும்

நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம்...

இந்தியா

ரயிலில் ஏறி வேர்களைத் தேடுவோம்!

புலம்பெயர்ந்தோர் தினத்தில் அவர்களுக்கெனத் தனித்துவமான ரயில் பயணத்தைத் தொடங்கிவைத்தார் இந்தியப் பிரதமர். பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ். பிரவாசி என்றால்...

இந்தியா

மேலே, உயரே, உச்சியிலே…

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன். இஸ்ரோ தலைவராக இவருக்கு முன்பு சோம்நாத்...

உலகைச் சுற்றி

உலகம்

போனது பதவி, வருகிறது தேர்தல்

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 1971 கிறிஸ்துமஸ் தினத்தன்று அன்றைய கனேடியப் பிரதமர் பியேர் ட்ரூடோவிற்க்கு ஒரு மகன் பிறந்தார். அவர்தான்...

சுற்றுலா

ராணுவம் இல்லாத நாடு

கொடைக்கானலிலுள்ள பாம்பார் அருவியில் ஒரு பெண் தன்னந்தனியாக ஆட்டம் போடும் விளம்பரம் எண்பதுகளில் மிகப் பரவலாகப் பேசப்பட்டது. நாற்பது வருடங்கள் கடந்தும்...

உலகம்

கோலாகல கோலா!

‘தம்பி, அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா’ என்று சொல்லிக் காரியம் சாதிப்பதெல்லாம் பூமர்கள் காலம். ஆரஞ்சு, நீலம், இளம்பச்சை எனப் பல...

ஆளுமை

கலப்படமில்லாக் கலைஞன்

பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளுக்கு இசையை வழங்கிய அவரது குரல் காற்றோடு கலந்தது...

உலகம்

தென்கொரியா: கைப்பையும் கலவரமும்

சக்கரங்கள் இல்லாமல் ஓடு தளத்தில் சிராய்த்து கொண்டே சென்ற ஒரு விமானம் அங்கிருந்த ஒரு சுவரின் மீது மோதி வெடிக்கிறது. 179 பேர் இறந்துவிட, இருவர் மட்டும்...

உலகம்

எல்லை மாற்றி எழுதும் இஸ்ரேல்

ஈத் மீலாத் மஜீத்! சிரியாவில் கூறப்படும் கிறிஸ்துமஸ் வாழ்த்து. மின் விளக்குகளாலான கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியை அலங்கரிக்கிறது ஒரு நட்சத்திரம்...

உலகம்

மரண தண்டனை அல்லது மறுபடியும் அதிபர்

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற தென் கொரிய ஜனாதிபதியின் பதவியைப் பறித்தாகிவிட்டது. தர்மம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. சுபம் போட்டுவிட்டு...

நுட்ப பஜார்

அறிவியல்-தொழில்நுட்பம்

சும்மா இரு, மரம் வளரும்!

பலருக்கும் குளியல் அறையில்தான் பாட வரும் என்று கேலியாகச் சொல்லுவார்கள். ஆனால், உண்மையிலேயே கழிப்பறையில் இருந்த போது தோன்றிய யோசனையானது இன்று பெரிதும்...

  • தொடரும்

    இலக்கியம் சக்கரம்

    சக்கரம் – 1

    1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும் வைத்தபடி, ‘பார்சல் புக்கிங் எங்க’ என்று கேட்டான், முரட்டுக் கதர் குர்த்தாவும் அதற்கு சம்பந்தமேயில்லாத டிராக் ஸூட்டும் அணிந்திருந்த அவன். பெரிய ஆள்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -139

    139. பையனா? பொண்ணா? விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ். ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப் பல உலக நாடுகளின் தலைவர்களைத் தெரியும்! அவங்க அப்பாவோட இந்த நாடு முழுக்கவும், இந்தியாவுக்கு வெளியிலயும் நிறைய பயணம் செய்திருக்காங்க! சுதந்திரப்...

    Read More
    தொடரும் நைல் நதி அநாகரிகம்

    நைல் நதி அநாகரிகம் – 10

    ஏரிகளை நிறைக்கும் கண்ணீர் கிளிமஞ்சாரோ மலை. பூமத்தியரேகையை ஒட்டிய கடற்கரை. பசுமையான சமவெளிப்பகுதி. அடர்ந்த காடுகள். ஆழமான ஏரிகள். இவை உள்ள, தான்சென்யகா உள்ளடக்கிய பகுதியே தான்சேனியா. உங்கள் கண்களுக்குப் பச்சைப்பசேலென்ற அழகான நாடு. ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குடிநீர் இன்றி அலைகிறார்கள். ஒரு...

    Read More
    சண்டைக் களம் தொடரும்

    சண்டைக் களம் – 10

    x. அமெரிக்கா பல நாட்டவரின் திறமைகளை உள்வாங்கி ஊக்குவிக்கும் அமெரிக்கா, பல நாடுகளின் சண்டைக்கலைகளையும் பாராட்டி ஊக்குவித்து வளர்த்தது. ஜப்பானிய, கொரிய, சீன, பிலிப்பைனிய சண்டைக்கலைகளை உள்வாங்கி அதில் அப்படியே தேர்ச்சி பெற்றும், அமெரிக்கப் பயிற்சிக்கு ஏற்றபடி அவற்றை மாற்றி வடிவமைத்தும் தன்...

    Read More
    எனதன்பே எருமை மாடே தொடரும்

    எனதன்பே எருமை மாடே – 10

    10. இடுக்கண் வருங்கால் நகுக “இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.” இது திருக்குறள் 621. இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவது என்னவென்றால். துன்பம் வரும் வேளையில் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அதுவே அத்துன்பத்தை வெல்வதற்கான சிறந்த வழியாகும் என்பதே. இதற்குப் பதில் சொல்வது போலக்...

    Read More
    குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

    குட்டிச்சாத்தான் வசியக் கலை – 10

    பூசலார் கதை கம்ப்யூட்டர்களின் மெமரி அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்ஃபோனில் கூட 256 ஜீபி சாதாரணமாகிவிட்டது. ஆனால் நமக்குத்தான் எல்லாமே மறந்துபோகிறது. சென்ற தலைமுறை நினைவில் வைத்துக்கொண்ட அளவில் பாதி கூட இப்போது நம்மால் இயல்வதில்லை. ”எத்தனை ஃபோன் நம்பர் உங்களுக்கு ஞாபகத்துல இருக்கு…?” என்று...

    Read More
    error: Content is protected !!