Home » வானமா எல்லை?
அறிவியல்-தொழில்நுட்பம்

வானமா எல்லை?

பகுதி 3: எலான் மஸ்க் என்றொரு தான்தோன்றி

1984ஆம் ஆண்டு. பன்னிரண்டு வயதான சிறுவன், தான் நிரலெழுதிய ப்ளாஸ்டார் (Blastar) என்ற விடியோகேம் விளையாட்டை பிசி அண்ட் ஆபீஸ் டெக்னாலஜி (PC and Office Technology) என்ற பத்திரிகை நிறுவனத்திற்கு ஐந்நூறு டாலர்களுக்கு விற்கிறான். தான் உலகிலேயே மிகப் பணக்காரனாகப் போவதற்கான வித்து அந்த ஐந்நூறு டாலர்கள் என்பது அன்று அந்தச் சிறுவனுக்குத் தெரியாது. தான் நுழைந்த அத்தனை துறைகளையும் தடம்புரட்டிப் போடும் ஓர் ஆளுமையாக வரப்போவதும் கூட அன்று அவனுக்குத் தெரிந்திருக்காது. அவன் பெயர் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே தொழில்நுட்பங்களிலும் வியாபாரத்திலும் ஆர்வம் கொண்ட அவர், பள்ளிப் படிப்பை முடித்த பின் பிரிடோரியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காகச் சேர்ந்தார் ஆனால் சில மாதங்களிலேயே அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து அங்கு தன் பட்டப்படிப்பை முடித்தார். புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்காக சேர்ந்த அவர் சில நாட்களிலேயே அங்கிருந்து விலகினார். பட்டப்படிப்பு படிக்கும் பொழுதே சிப்2 (Zip2) என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். 1999ஆம் ஆண்டு அதைச் சுமார் முந்நூறு மில்லியன் டாலர்களுக்கு விற்றார். அந்தப் பணத்தில் தனது அடுத்த முயற்சியாக எக்ஸ்.காம் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!