இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது. இரண்டுமே பட்டி தொட்டி எங்கும் ஹிட். வசூலும் அமோகம். பல தமிழ்த் திரைப்படச் சாதனைகளை முறியடித்துவிட்டது. அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான். இது பொன்னியின் செல்வன் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். திரைப்படமே இவ்வளவு பெரிய வெற்றி என்றால், புதினம் அடைந்த வெற்றியைத் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நாம் கூறத் தேவையில்லை.
திரைப்படம் வந்ததால் புத்தகத்தின் விற்பனை இன்னும் சூடு பிடித்துள்ளது. இந்தத் தலைமுறையினர் பலரும் கதையைத் தாண்டி கல்கியைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முன்பே அவரைப் பற்றி சுந்தா எழுதிய வாழ்க்கை வரலாறு இருந்தாலும், அது எளிய வாசகர்களுக்கானதல்ல. ஏகப்பட்ட அடிக்குறிப்புகளும் அடைப்புக் குறிகளும் நிறைந்திருக்கும் ஆய்வு நூல். கல்கியின் வாழ்க்கையை அவரது நாவல்களைப் போலவே விறுவிறுவென வாசிக்க இப்போது ஒரு புத்தகம் வந்திருக்கிறது. எஸ். சந்திரமௌலி எழுதியிருக்கிறார்.
nice recall nandini