மனிதக் குடலில் வாழும் நுண்ணுயிரிகளின் தொகுப்பு
(The Human Gut Microbiome)
மனித நுண்ணுயிர்த் தொகுப்பு, குறிப்பாக மனிதனின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிர்களின் தொகுப்பு மற்றும் அதனுடன் இணைந்த மனித உடல்நலத்தின் மீதான ஆர்வம் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் கடந்தசில வருடங்களாக அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கியக் காரணம் மனிதக் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகள் நமது உடல் நலத்தில் ஏற்படுத்தும் நம்ப முடியாத அளவிலான மாற்றங்கள்தான். குடல் நுண்ணுயிர் தொகுப்பில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித உடல் நலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சொல்லப்போனால் குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகள் குடல் பகுதியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள உறுப்புகளையும் மற்றும் அதன் செயல்களையும் கூடக் கட்டுப்படுத்துகின்றன.
இங்கு நாம் நுண்ணுயிரிகள் எனக் குறிப்பிட்டு வருபவை வைரஸ், பூஞ்சை மற்றும் இன்னபிற வகையான நுண்ணுயிரிகளையும் குறித்தாலும், குடல் நுண்ணுயிரித் தொகுப்பு சம்பந்தப்பட்ட பெரும்பான்மையான ஆய்வுகள் பாக்டீரியாக்களை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. எனவே கீழே விவரித்துள்ள ஆய்வு முடிவுகள் பாக்டீரியாவை அடிப்படையாகக் கொண்டவை.
Add Comment