ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார். இத்தளத்தை மாற்றி அமைக்க லிண்டா யாக்கரினோவுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் எலான் மஸ்க்.
அவர் கடந்த ஆண்டு அக்டாபரில் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை வாங்கினார். மஸ்க் பொறுப்பேற்றதும், லாபம் ஈட்ட முடியாமல் திணறினார். அந்த நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைச் சர்ச்சைக்குரிய வகையில் நீக்கினார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அந்த முயற்சிகள் பலனளித்ததன என்றார். ட்விட்டரின் நிதிநிலை மேம்பட்டு வருவதாகவும் கூறினார்.
Add Comment