துருக்கி அதிபர் ரஜப் தையிப் எர்டோகனுக்கு சங்கு சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதாகவே மே 14-ம் தேதி நடந்த அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை சர்வதேச மீடியாக்கள், அரசியல் விற்பன்னர்கள் முதல் ஊர்பேர் தெரியாத யூடியுப் அறிஞர்கள் வரை கதறினார்கள். ஆனால் அத்தனை ஆருடங்களையும் பொய்யாக்கிவிட்டு அதிபர் எர்டோகன் 49.5 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரது கூட்டணிக்கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்று அனைவர் எதிர்பார்ப்புகள் மீதும் ஒரு டன் கரியைப் பூசிவிட்டது.
யாருமே ஐம்பது சதவீத ஓட்டுக்களை எடுக்காததால் மே 28-ம் தேதி அதிபர் எர்டோகனுக்கும், பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளரான கமல் கிளிக்ட்ரோலுவுக்கும் இடையே அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. துருக்கித் தேர்தல் அமைப்பையும், நவீன துருக்கி கடந்து வந்த பாதையையும் கடந்த வாரக் கட்டுரையில் விரிவாய் அலசியிருப்பதால் எல்லோரும் பத்தாம் கிளாஸ் பாஸ் என்று ஊகித்துக் கொண்டு ப்ளஸ் டூவிற்குச் சென்றுவிடலாம்.
Add Comment