ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி வைத்துவிட்டு இந்த செங்கோல் அரசியலைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முகம் இருந்து வருகிறது. அதை அழுத்தித் துடைத்துவிட்டு, மதத்தை முன்னிலைப்படுத்துவது இச்சம்பவத்தின் பின்னால் இயங்கும் முதல் அரசியல்.
பாரதீய ஜனதா, பிராமணர்களின் முழுமையான ஆதரவைப் பெற்ற கட்சி என்பது பொதுவாக தேசமெங்கும் உள்ள ஒரு கருத்து. ஆனால் இந்தியாவில் பிராமணர்கள் பெரும்பான்மை சமூகத்தினர் அல்லர். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெற உள்ள பொதுத் தேர்தல்களின் சமயம், தன்னை பிராமணர் அல்லாத பிற அனைத்துச் சாதி இந்துக்களுக்கும் பிரதிநிதியாக முன்வைத்தே தீர வேண்டிய அவசியம் அக்கட்சிக்கு இருக்கிறது.
இப்போதும் அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள் என்றபோதிலும் தென் இந்தியா முழுவதும் அக்கட்சிக்கு இன்று வலுவான பிடிமானமோ, காலூன்ற ஓரிடமோகூட இடமில்லாமல் போயிருக்கக் கூடிய சூழலில், அக்கருத்தாக்கத்தை அழுத்தந்திருத்தமாக மக்கள் மனங்களில் பதிய வைக்க வேண்டிய அரசியல் நெருக்கடி உண்டாகியிருக்கிறது.
அருமையான கட்டுரை