இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வந்திருந்தார்கள். நோக்கம் முதலீட்டாளர்களை ஈர்ப்பது.
முதல்வரின் பயணத்திட்டம் சிங்கப்பூருக்கானது மட்டுமல்ல, ஒன்பது நாட்களுக்கு, சிங்கப்பூர் மற்றும் யப்பான் நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம். அதன் முதல் அங்கமான இரு நாட்கள் பயணம் சிங்கப்பூருக்கு.
சிங்கைக்கு வந்த முதல்வருக்கு சிங்கைத் தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து மிகப் பிரமாதமான ஒரு வரவேற்பை அளித்தார்கள். அது சிங்கையில் தமிழர்கள் பெற்றிருக்கும் இடத்தினால் சாத்தியமானது என்று சொல்வதில் தவறில்லை. நவீன சிங்கையைக் கட்டமைத்த ஆசியாவின் அரசியல் வித்தகரும், சிங்கப்பூரின் தந்தையுமான லீ க்வான் யூ, தமிழர்களின் உழைப்பை மதித்து அங்கீகரித்து, சிங்கையின் அரசு மொழிகளில் ஒன்றாகத் தமிழையும், முக்கிய இனக்குழுவினரில் ஒன்றாக சிங்கைத் தமிழரையும் அங்கீகரித்ததன் காரணமாகவே இந்த சிறப்பான வரவேற்பு சாத்தியம் என்று கூறினால் அதில் தவறில்லை. ஒப்பீட்டளவில் வேறு ஒரு மாநில முதல்வர் சிங்கைக்கு வந்தால் எந்த விதமான வரவேற்பு நிகழ்வு நடக்கிறது என்று பார்த்தால் நான் சொல்லவருவது விளங்கும்.
கட்டுரையாளர் அனைத்து சிங்கை நிகழ்வுகளையும் படம் பிடித்தாற்போல் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். நன்றி… சில சொற்களை ஆங்கிலத்திலேயே பயன்படுத்தலாம் உ.ம். (திட்டம் -புராஜக்ட் பதிலாக Project)