பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே எழுதியிருந்தோம். சங்கதி இன்றைக்கு சந்திக்கு வந்திருக்கிறது.
ரகசிய ஆலோசனை என்று முத்திரையிடப்பட்டாலும் இதில் ஒரு புண்ணாக்கு ரகசியமும் இல்லை. மே பன்னிரண்டாம் தேதி கத்தார் பிரதம மந்திரி முஹம்மது பின் அப்துல் ரஹ்மானும் தாலிபன் தலைவர் முல்லா அக்குன்ஸதாவும் கந்தஹாரில் சந்தித்துப் பேசியது ஒரு பதினைந்து நாள் தாமதமாக வெளியே தெரிய வந்ததை மட்டுமே ரகசியம் என்று கொள்ளலாம். ஆனால் பேச்சு வார்த்தை நல்லபடியாக முடிந்தது என்று கத்தார் அரசு எப்போது அமெரிக்காவுக்குத் தகவல் அனுப்பியதோ, அந்தக் கணமே அது உலகப் பொது செய்தியாகிப் போனது.
Add Comment