இரண்டு தசாப்தங்களின் பின் தனது தாய் நாட்டுக்குத் திரும்புகிறது ‘முது’ என்கிற முது ராஜா. பயணச் செலவு ஏழு இலட்சம் யு.எஸ். டாலர்ஸ்! பளபளக்கும் நீண்ட தந்தங்களையுடைய முழு வளர்ச்சியடைந்த யானையொன்றை, நாடு விட்டு நாடு தூக்குவதென்பது எளிதான காரியமல்ல. அதுவும் நோய்வாய்ப்பட்டு, கொஞ்சம் சீக்கிரமாகவே வயதான தோற்றம் பெற்று, உழைத்துக் களைத்துப் போன பலவீனமான யானையொன்றை அனுப்பப் போகிறார்கள்.
நடந்தது இதுதான்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு தாய்லாந்து அரசு ஒரு யானைக் குட்டியை இலங்கைக்கு ராஜாங்க அன்பளிப்பாக வழங்கியிருந்தது. அதிகாரிகளிடமிருந்து கை மாறியதுமே சாஸ்திர சாம்பிரதாயப்படி ‘சக் சுரின்’ என்ற அதன் பெயரை ‘முது ராஜா’ என்று இலங்கை வனவிலங்குத் திணைக்களம் சாட்சியாய்ப் பெயர் மாற்றி அழகு பார்த்தது அரசு.
well written. especially the question and answers