வெளியே தூறல் மழை. ‘பார்த்த முதல் நாளே… உன்னைப் பார்த்த முதல் நாளே…’ பாடல் காருக்குள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. பதினேழு வருடங்கள் கழித்து அனிதாவைப் பார்க்கப் போவது சுரேந்தருக்குப் பரவசமாக இருந்தது.
“அடுத்த மாசம் பன்னிரண்டாம் தேதி அனிதாவுடைய அக்கா பொண்ணுக்குக் கல்யாணம். நீ ஈரோடு வந்தால் அவளைப் பார்க்கலாம். நான் அனிதாகிட்ட பேசி ஏற்பாடு பண்றேன். அவளும் உன்னைப் பார்க்க ஆர்வமா இருக்கா.” பூர்ணிமா போனில் சொன்னாள்.
“இப்போ என்ன திடீர்னு ஈரோடு… பிரண்ட்ஸ் எல்லாம் வராங்க. ரூம் போட்டு தண்ணி போடப் போறீங்க… அதானே?” என்று கேட்டாள் மனைவி. அனிதாவைப் பார்க்கப் போவதைச் சொன்னதும் ஒரு மாதிரியாகிவிட்டாள்.
“அந்தக் காதலை வாழ்க்கை காட்டாறு மாதிரி அடிச்சிட்டுப் போயிடுச்சி. இனி இன்னொரு முறை அவளை நான் பார்ப்பேன்னு நம்பிக்கை இல்லை. அதான் கடைசியா அவளைப் பார்க்கப் போறேன்.” என்றதும் கொஞ்சம் சமாதானமானாள். சுரேந்தர் புறப்பட அவளே துணிமணிகள் எடுத்துவைத்து உதவினாள்.
கார் சம்பத் நகருக்குள் நுழைந்தது. அகலமான சாலையைத் தவிர இருபுறமும் காம்ப்ளஸ்களும் கடைகளும் நிறைய மாறியிருந்தன. மிகப் பெரிய மருத்துவமனை ஒன்று புதிதாகத் தோன்றியிருக்கிறது. வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஈரோடு வந்தாலும் சம்பத் நகருக்குள்வர அவசியம் இருந்ததில்லை.
nice one..incidentally the birth place ( erode ) and the living place both were present (madurai)
பூர்ணிமாவிற்கு சுரேந்தரை எப்படித் தெரியும்