கொழும்புச் சீமைக்கும் சிங்காரச் சென்னைக்கும் இடையில் தூரம் என்னவோ அறூநூற்றைம்பது கிலோ மீற்றர்கள்தான். ஆனால் இடை நடுவில் ஆர்ப்பரிக்கும் கடலைத் தாண்டிப் போக வேண்டியிருப்பதால் பயணம் எப்போதுமே காஸ்ட்லியானது. இத்தனை காலமும் இந்த இரு புள்ளிகளுக்குமிடையில் கள்ளத்தோணி தவிர்த்து, ஆகாய மார்க்கம் ஒன்றில் மட்டுமே போக்குவரத்து வசதி இருந்து வந்தது. விதவிதமான எயார்லைன்ஸ் சேவைகளில் அவரவர் தேவைக்கேற்றபடி கட்டணம் செலுத்தி ஒன்றரை மணித் தியாலங்களுக்குள் இமிக்ரேஷன் சம்பிரதாயங்களையும் முடித்துப் போய்ச் சேரலாம். பயணத்தின் போது சாதாரணப் பயணி ஒருவர் தம் எடை போக, அதிகபட்சம் முப்பது கிலோ பொருள்களைச் சுமக்கலாம். விமானச் சேவைகளின் வழமையான கெடுபிடிகளும் உள்ளடங்கலாக இருக்கையின் சூடு தணிவதற்குள் பயணம் முடிந்துவிடும். கட்டிய பணத்திற்குத் தரும் ஒருவேளை உணவைக்கூட ரசித்துச் சாப்பிட போதியளவு நேர அவகாசம் கிடைக்காது.
இதைப் படித்தீர்களா?
52. மூப்பன் அதர்வனின் ஆசிரமத்தை நெருங்கியபோது உக்கிரமாகப் பனி பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு நடந்து வந்த வழியெல்லாம் பனிதான், குளிர்தான். ஆனால்...
52. ஒழுக்கம், உண்மை, அகிம்சை, உழைப்பு ஏப்ரல் 20 அன்று, காந்தி சென்னையிலிருக்கும் இந்திய ஊழியர் சங்கத்திற்கு வந்தார், அங்கு உருவாக்கப்பட்டிருந்த...
Add Comment