நமது அன்றாட வாழ்வின் வேகத்தை முடிவு செய்யும் முக்கியக் காரணிகளில் ஒன்றாகவே மாறியிருக்கிறது இணைய இணைப்பின் வேகம்.
யூடியூபில் வீடியோக்கள் பஃப்பர் ஆகி நின்று நின்று வருமென்பதை இன்றையக் குழந்தைகள் நம்பவே மறுக்கின்றனர். உணவு, உடை, இருப்பிடம் என்ற வரிசையில் வைக்கத் தகுந்ததாகியுள்ளது இணைய இணைப்பு. இதை மிகையென்று நீங்கள் எண்ணினால், “நாளைல இருந்து யூடியூப் வரவே வராதாம் பாப்பா” என்று ஏதேனும் ஒரு குழந்தையிடம் சொல்லிப் பாருங்கள்.
ஆதியில் டயல் அப் இணைப்பு தொடங்கி இன்றைய “பைபர் டூ த ஹோம்” (Fibre To The Home: FTTH) வரை இணைய இணைப்பு, யுகங்கள் தோறும் வேறு வேறு அவதாரங்கள் எடுத்து வந்திருக்கின்றது.
இப்போது தான் இரண்டு ஜி அலைக்கற்றை பற்றிப் பேசிக்கொண்டிருந்தது போலத் தோன்றுகின்றது. ஆனால் அதற்குள் நாம் ஐந்து ஜி யைக் கடந்து “ஆறு மனமே ஆறு” என ஆறாம் தலைமுறை இணைப்பைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறோம்.
V practical suggestions