இங்கிலாந்து இளவரசர் ஹாரி சென்ற வாரம் இரண்டு நாள்கள் லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கில் சாட்சியாகத் தோன்றினார். அண்மைக்காலத்தில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் சாட்சிக் கூண்டில் நிற்பது இதுவே முதல் தடவை. இந்த வழக்கு பிரபலங்கள் பலரது தொலைபேசிகளையும் வாய்ஸ் மெயில்களையும் மிரர் குரூப் நியூஸ்பேப்பர்ஸ் நிருபர்கள் சட்டவிரோதமாக ஹேக் பண்ணித் தகவல்கள் சேகரித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கு. குற்றம் சாட்டப்படும் பிரபலங்களில் இளவரசர் ஹாரியும் ஒருவர். இந்த வழக்கு ஏழு வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒரு சிக்கலான வழக்கு.
இளவரசர் ஹாரிக்கு இது மட்டுமே முதலாவது வழக்கு என்றோ சர்ச்சை என்றோ சொல்ல முடியாது. ஆனாலும் நேரடியாகச் சாட்சிக் கூண்டில் சாட்சி சொல்ல வந்தது இதுவே முதல் தடவை.
தமது முயற்சி மற்றும் திறனால் பிரபலமானோர் உண்டு. பிறப்பினால் பிரபலமானோரும் உண்டு. பிரித்தானிய இளவரசர் ஹாரி இதில் இரண்டாம் ரகம். பிரபலாமாகியதற்கான காரணம் எதுவானாலும் அனைத்துப் பிரபலங்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சினை உண்டு. அது ஊடகவியலாளர்களும் ஃபோட்டோகிராபர்களும் இவர்களை இருபத்து நான்கு மணி நேரமும் துரத்திக் கொண்டே இருப்பது.
Add Comment