Home » உயிருக்கு நேர் – 29
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 29

ஆறுமுக நாவலர்

29 ஆறுமுக நாவலர் (18.12.1822 – 05.12.1879)

 ஈழத்தின் தமிழறிஞர்களுக்கான அடையாளங்களுள் முக்கியமானவர்; தமிழ்மொழியின் இலக்கியங்களுக்கு உரை, பதிப்பு என இரு விதங்களில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்த முன்னோடி. தமிழ்ச் சுவடிப் பதிப்பின், தமிழ் உரைநடையின் வேந்தர் என்று புகழ்முகம் பெற்றவர். வசனநடை கைவந்த வள்ளலார் என்று பரிதிமாற்கலைஞராலும், நாவலர் என்று திருவாவடுதுறை ஆதீனத்தாலும், புதிய தமிழ் உரைநடையின் தந்தை என்று மு.வரதராசனாராலும், செந்தமிழைப் பேணி வளர்ந்த பெரும்புலவன் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையாலும், ஆங்கில உரைநடைக்கு ஒரு டிரைடன் (Dryden) போல, தமிழுக்கு அமைந்தவர் என்று கா.சு.பிள்ளையாலும், தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு மேற்கூரை அமைத்தவர் உ.வே.சா, சுற்றுச்சுவர் வைத்தவர் சி.வை,தாமோதரம் பிள்ளை என்றால், அடித்தளம் அமைத்தவர் இவர்தான் என்று திரு.வி.க’வாலும், சைவக்குரவர் நால்வருக்குப் பின் தோன்றிய சைவக் குரவராக, சைவநெறி காக்க வந்த சண்டமாருதம் என்று தமிழ்ச்சைவ அறிஞர்களாலும் போற்றப்பட்டவர்.

இலங்கையில் மட்டுமின்றி, தமிழகத்திலும் பற்பல தமிழ் சைவத்தொண்டுகளை முன்னின்று செய்தவர் இவர். சிதம்பரத்தில் இவர் தோற்றுவித்த சைவப் பிரகாச வித்தியாசாலைதான் பின்னாட்களில் அண்ணாமலைப் பல்கலை சிதம்பரத்தில் எழுந்ததற்கு வழிகாட்டியாக இருந்தது எனலாம். தனது பதிப்புப் பணிகளுக்காக ஈழத்திலும், சென்னையிலும் ஒரு மிகச் சிறந்த அச்சுக்கூடத்தை நிறுவியவர் அவர். தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று சைவமும் தமிழும் பற்றிச் சொற்பொழிகள் அளித்தவர். இவை அனைத்தையும் எந்த ஒரு நிறுவனப் பின்புலமும் இல்லாமல் ஒரு தனிமனிதராக முயன்று சாதித்தவர் இவர். இலங்கை கண்ட தமிழறிஞர்களில் முதல் மற்றும் முக்கியமான ஒருவரான ஆறுமுக நாவலரே இந்த உயிருக்கு நேர் பகுதியின் நாயகர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!