ஓரிரு வருடங்களுக்கு முன்பு, விமான நிலையக் கூரை இடிந்து விழுந்தது என்று மாதம் ஒருமுறையாவது செய்தி வரும். இது ஒரு ‘வழக்கம்’ ஆகிவிட்டபோது ‘விமான நிலையக் கூரை, இத்தனையாவது முறையாக உடைந்து விழுந்தது’ என்று எழுத ஆரம்பித்தார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் என்ற ஒன்று ஏற்படாததால் அது ஒரு நகைச்சுவையாகிப் போனது.
இது ஒரு புறமிருக்க, கடந்த வாரம் தமிழ்நாட்டில் மூன்று ரயில்கள் தடம் புரண்டிருக்கின்றன. இதில் இரண்டு ரயில்கள் சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் விபத்துக்குள்ளாயின. அதே அதிர்ஷ்டவசம்தான். உயிர்ச்சேதம் இல்லாததால் விபரீதமாகவில்லை என்றாலும் இது சிரித்துக் கடக்கும் விஷயமல்ல.
ஒடிசாவில் நடைபெற்ற கொரமண்டல் ரயில் விபத்தும் அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களும் அத்தனை எளிதில் நமக்கு மறக்காது. இறந்தவர்களைக் கொத்துக் கொத்தாக எடுத்துப் போட்ட காட்சியைக் கண்டு பதைபதைத்துப் போனோம். சதி வேலையா, சிக்னலில் சிக்கலா என்று இப்போதுதான் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஒப்புக்கு ஒரு சில ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள். அந்தச் சூடு தணிவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் மூன்று தடம் புரண்ட சம்பவங்கள்.
ஊட்டி ரயில் விபத்தும் சரி; சென்னையில் நடைபெற்ற சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவமும் சரி; ஜனசதாப்தி ரயிலின் காலிப் பெட்டி கவிழ்ந்ததும் சரி. நமக்குத் தெள்ளத் தெளிவாகச் சொல்கிற செய்தி ஒன்றுதான்.
Add Comment