பல மாதங்களாக ‘வரும் வராது’, ‘இதுவரை வந்தது எதுவும் பெருமளவில் புகழ் பெறவில்லையே, அதனால் இவர்கள் இதைச் செய்வார்களா செய்யமாட்டார்களா’, ‘அந்தப் பழ நிறுவனம் தனது மந்திரக்கோலை இந்தத் துறையின் மீது தொடுவார்களா’ என்று பல கேள்விகளோடு கணினி உலகமே எதிர்பார்த்தது இந்த மாதம் முதல் வாரத்தில் வந்தேவிட்டது.
இந்திய ரூபாயில் மூன்று இலட்சம் விலை. அதுவும் அடுத்த ஆண்டு (2024-ல்) தான் வரப் போகிறது, இருந்தும் கடந்த இரண்டு வாரமாகக் கணினியுலகப் பத்திரிகையாளர்கள் அனைவரும் இதைப் பற்றித்தான் பேசுகிறார்கள். வெளிவந்த ஆண்டில் மட்டுமே இதன் விற்பனையின் மூலம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு நேரடி வருவாயாக நாற்பதாயிரம் கோடி ரூபாய் வரும் எனக் கணித்திருக்கிறது பாங்க் ஆஃப் அமெரிக்கா.
அப்படி என்ன மாயாஜாலச் சாதனம் இது? உண்மையில், மாயங்களை நம் வீட்டின் வரவேற்பறைகளில், அலுவலகங்களில் செய்யக் கூடிய, வெற்றி பெற்றால் அடுத்த தலைமுறை எப்படிக் கணினியோடு உறவாடுவார்கள் என்பதைப் புரட்டிப் போடக் கூடியதன் ஆரம்பம் தான் ஆப்பிள் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி அறிமுகப்படுத்திய ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro).
Add Comment