56. வைஸ்ராய் – காந்திஜி சந்திப்பு
இந்திய அரசியல் சூழ்நிலை அமைதியாய் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருக்க, வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு முக்கிய இளம் தலைவர்களான ஜவஹர்லால் நேருவையும், சுபாஷ் சந்திரபோஸையும் பிடித்து உள்ளே போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு சிலர் ஆலோசனை கூறிய வேளையில், 1929 கோடை காலத்தில் வைஸ்ராய் இங்கிலாந்துக்கு விடுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
அங்கே போன பின்னரும் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயர் மட்ட நிர்வாகிகளோடு இந்திய அரசியல் நிலைமை குறித்து விவாதித்தார். லண்டனில் தேஜ் பகதுர் சப்ரு உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் மூலமாக காங்கிரஸ் தலைவர்களோடு ஏதாவது சமரசத் திட்டத்துக்கு வாய்ப்புள்ளதா என்று ஆலோசனை செய்தார். “நான் என்னால் ஆனதைச் செய்கிறேன். நீங்கள் உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள்” என்று சொன்னார்.
Add Comment