இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகாரில் கூடி ஆலோசனை செய்துள்ளார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அணி திரட்டும் நிகழ்வு பிகாருக்குப் புதிதல்ல. கட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை.
ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசினால் உடனே சிறைவாசம். அரசின் அத்தனை அமைப்புகளும் பாய்ந்து நடவடிக்கை எடுக்கும். அனைத்து மாநில செய்தி வெளியிடும் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில். என்ன பிரசுரமாக வேண்டும் என்பதையும் அரசே முடிவு செய்யும். எதிர்ப்பவர்கள் மீது அடக்குமுறை பாயும். தான்தான் இந்தியா என்று நினைக்கும் பிரதமர். மக்களின் நிலை பற்றியோ உரிமை பற்றியோ கவலை இல்லை. ஜனநாயகம் என்ற சொல்லே அர்த்தமற்றுப் போனது.
Add Comment