Home » ஆபீசுக்குப் போவது போல ஆழ்கடலுக்குப் போகலாமா?
உலகம்

ஆபீசுக்குப் போவது போல ஆழ்கடலுக்குப் போகலாமா?

கடற்படுக்கை என்றவுடன் மீன்கள் பாடித் திரியும் ‘ மெத்’ என்ற மணற்தரை ஒன்றைக் கற்பனை பண்ணி வைத்திருப்போம். ஆனால் நிஜத்தில் ஆழியின் அடித்தளம் மிக மிகப் பயங்கரமானது. விசாலமானது. பரபரப்பான வாஷிங்டன் நகரைவிடப் பன்மடங்கு சுறுசுறுப்பானது. மலைகள், அகழிகள், எரிமலைகள், சுடுநீர்ச் சுனைகள், இரசாயனத் தொழிற்சாலைகள், வளர்ந்து கொண்டே இருக்கும் வதிவிடங்கள் என்று பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டது. துரிதமாக மாறக் கூடியது கடலின் முகம். அதாவது ஒரு நாள் பார்த்த கடல், மறுநாள் அங்கே இருக்காது!

இவையனைத்தையும் எதிர்பார்த்தே கப்பல்கள் சமுத்திர மேற்பரப்பில் செல்கின்றன. பயணத்தின் போது நொடிக்கு நொடி வெளிப்படும் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஃபிசிக்ஸ் துணையைப் பயன்படுத்துகின்றன.

அதே ஃபிசிக்ஸ் கொடுத்த இன்னுமொரு வரம், ஆழ்கடல் பயணம். நீர்மூழ்கிக் கப்பல் எனப்படும் சப்மரீன் கலத்தில் ஏறிப் போகும் ஊர்வலம். நெடுங்காலமாகவே, உலக நாடுகள் ஏனைய நாடுகளைக் கண்காணிப்பதற்கும், ஒற்றன் வேலை பார்ப்பதற்கும் பயன்படுத்தி வருகின்ற முறை இது. சப்மரீனைப் போலன்றி, கொஞ்சம் சின்னதாக வேறு தொழில்நுட்பத்துடன் கடலுக்குள் மூழ்கும் கலம், சப்மர்சிபல் submersible எனப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!