எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு என்பது பேச்சாக இருக்கிறது. ஏற்கனவே கூகுள் பார்ட், மைக்ரோசாப்ட் பிங்க் சாட், சாட்-ஜி-பி-டி என்னென்ன செய்யும் என்று பார்த்துவிட்டோம், இவர்கள் மட்டும்தான் இந்தத் துறையில் புதுமை செய்கிறார்களா என்றால் இல்லை. பல புத்தொழில்களும் இதில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள். அப்படியான சில செயலிகளை இங்கே பார்க்கலாம்.
எழுதும் எல்லோருக்கும்
பயர்லி (Bearly.AI) என்னும் செயலி விண்டோஸ், ஐஃபோன், லினக்ஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது. இதைக் கொண்டு இணையத்தில் கிடைக்கும் விவரங்களை, உங்களின் கணினியில் இருக்கும் தரவுகளைப் படிப்பதை எளிதாக்கலாம், நீங்கள் எழுதும் மின்-அஞ்சல்களை, கட்டுரைகளை, அலுவலகக் கோப்புகளை நன்றாக இருக்கும்படி மாற்றி, இலக்கணப் பிழைகளைச் சரிசெய்து தரச் சொல்ல முடியும். இதைத் தவிர இந்தச் செயலியைக் கொண்டு யூட்யூப், அமேசான் தளங்களில் நீங்கள் பார்க்கும் பக்கத்தில் இருக்கும் எண்ணற்ற கருத்துக்களைத் தொகுத்து, சுருக்கமாகக் கொடுக்கச் செய்ய முடியும்.
Add Comment