‘2022ஆம் ஆண்டில் பால்மைரா’ என்ற தலைப்பில் ஒரு ஓவியம். சிரியாவின் சிதைக்கப்பட்ட பண்டைய பால்மைரா நகரின் நிலப்பரப்பை காட்சிப்படுத்தியது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் முக்கிய மாவட்டத்தில் நடந்தது இந்த ஓவியக் கண்காட்சி. நடத்தியது 83 வயது, வியாலியெட்டா ப்ரிகோஷினா. சிரியா நாட்டுப் போரின் போது வாக்னர் வீரர்களின் படைத்தளமாக விளங்கியது இந்நகரம். பேரன் பாவேல் ப்ரிகோஷின், ‘கருஞ்சிலுவை’ எனும் வாக்னர் படையின் வீரவிருதை வாங்கியதும் இங்குதான். இப்பகுதியைக் கைப்பற்றியது வியாலியெட்டாவின் மகன் எவ்கேனி வீக்தரவிச் ப்ரிகோஷின்.
ரஷ்யாவைக் காப்பாற்றிய மன்னிப்பு :
உலகின் கலாசாரத் தலைநகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின், இரு முக்கிய ஆளுமைகளில் ஒருவர் ப்ரிகோஷின். வாக்னர் எனப்படும் ரஷ்யாவின் தனியார் இராணுவப் படைத்தலைவர். இன்னொருவர் இவரது நண்பர் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். தமிழ் திரையுலகில் ஒரே பகுதியிலிருந்து வந்த ராஜாக்கள் இசையிலும், இயக்கத்திலும் கோலோச்சினார்களே? அதுபோல, ரஷ்யாவின் அதிகாரத்தை உலகளவில் நிலைநாட்டியது இந்த ஜோடி.
Add Comment