பொன் அம்பல மேடை ஏற நான்கு நாள்களுக்கு அனுமதி இல்லை என்று எழுதி வைத்து மீண்டும் செய்தியில் இடம் பிடித்தார்கள் தீட்சிதர்கள். சிதம்பரம் கோயிலில் மூலவர் வீற்றிருப்பது சில அடிகள் உயரத்தில். பொன்னம்பல மேடையில் ஏறினால் மூலவரை அருகே நின்று தரிசிக்கலாம். குறுகிய அளவுள்ள இடம். கூட்டம் அதிகம் வருகையில் நிர்வாகக் காரணங்களுக்காக எடுக்கப்படும் இதுபோன்ற முடிவுகளை பெரிது படுத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. கேட்காமல் விட்டால், அதுதான் வழக்கம் என நிறுவி விடுவார்கள் என அஞ்சுகிறது பக்தர்கள் தரப்பு.
அதற்கேற்ப, பிபிசி நேர்காணலில் “பக்தர்களின் நலன் கருதி அபிஷேகத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் படிக்கட்டுகளில் அமரக்கூடாது எனவும் போர்டு வைக்க உள்ளோம்” என்கிறார் சிவராம தீட்சிதர். பெருந்தொற்றுக் காலத்தில் பொன்னம்பல மேடை ஏறி வழிபடுவது பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டது. பெருந்தொற்றுப் பயம் நீங்கிய பிறகும் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் போய் அனுமதி வாங்கப்பட்டது. இன்று நேற்றல்ல, அனுமதி மறுப்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உள்ளது.
பாகுபாடு பார்ப்பதில் பாகுபாடு காட்டாதவர்கள்!பலே!
விஸ்வநாதன்
informative and exhaustive report
சிதம்பரம் கட்டுரை அருமை. சென்ற வாரம்தான் அங்கு போயிருந்தோம். இந்த விவகாரம் எதுவுமே தெரியாமல்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தில்லியில் நடந்து கொண்டிருக்கும் சட்டப் போராட்டம் ஆச்சர்யமளிக்கிறது. அரசு கோர்ட்டுக்குப் போனால் தீட்சிதர்கள் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கப் போகிறாய்கள்.
நடராஜரை வைத்து தீட்சிதர்கள் ஆடும் திருவிளையாடல்கள்..