ஒரு வைரஸ் காய்ச்சல் வரப் போகிறதென்றால் முதலில் லேசாகத் தொண்டை கரகரக்கும். பிறகு மூக்கொழுகும். தலை வலிக்கத் தொடங்கும். கடைசியில் காய்ச்சல் வந்ததும் டாக்டரைப் பார்க்கக் கிளம்புவோம். அல்லது மருந்துக் கடையில் பாராசிட்டமால் வாங்கிப் போட்டு சரி செய்ய நினைப்போம்.
ஒரு நாட்டின் சுகக் கேடு என்பது பொதுவாக பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்றத்தில் ஆரம்பிக்கும். இந்த இடத்தில் அதனைத் தலைவலி எனக் கொள்வோமானால் இன்றைய காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் திடீர் விலையேற்றம் என்பதே முதலில் வருகிற தொண்டைக் கரகரப்பு.
Add Comment