59. ஏழை மனிதனின் போர்
மார்ச் 12-ஆம் தேதி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து காந்திஜி நடைப் பயணமாகத் தண்டியை நோக்கிப் புறப்பட்டபோது அவருடன் 78 சத்தியாக்கிரகிகள் இருந்தார்கள்.
அரசாங்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாளான ‘தி ஸ்டேட்ஸ்மென்’ இது பற்றி வெளியிட்ட செய்தியில், “வழக்கமாக காந்திஜியின் நிகழ்ச்சிக்கு வருகிறவர்களைவிடக் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் திரண்டிருந்தார்கள்” என்று சற்றே கிண்டலாகக் குறிப்பிட்டது.
ஆனாலும் காந்திஜியும், அவரது சத்தியாக்கிரகிகளும் சென்ற வழிநெடுக ஆயிரக்கணக்கான மக்கள் நின்றிருந்தார்கள். முதல் நாள் நடைப் பயணம் அஸ்லாலி என்ற கிராமத்தில் முடிந்தது. அங்கே காந்திஜியின் பேச்சைக் கேட்க சுமார் நாலாயிரம் பேர் போலக் கூடி இருந்தார்கள். “ஒரு பிடி உப்பில்தான் நம்முடைய இந்தியாவின் சுய மரியாதை இருக்கிறது!” என்று காந்திஜி முழங்கினார்.
Add Comment