“சென்ற வாரம் பக்கத்து ஊரிலிருந்து ஒருவர் பேசினார். குப்பைக்குப் பணம் கொடுக்கிறீர்களாமே எங்கள் ஊரில் ஒரு சின்ன மலை அளவுக் குப்பை இருக்கிறது, எடுத்துக் கொள்கிறீர்களா’ என்று கேட்டார். ‘எனக்குச் சிரிப்பைவிட வேதனை தான் வந்தது. தான் உள்ள ஊருக்கு நிகழும் ஆபத்தைக் கூட அவர் உணரவில்லை.” என்கிறார் ராஜவள்ளி ராஜீவ். குப்பைக்குப் பணம் தருகிறாரெனில் ராஜவள்ளி பழைய பேப்பர் வியாபாரி என்று நினைக்கத் தோன்றுகிறதா? இல்லை. இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் திரு.முத்துவின் மருமகள். தன் மாமியார் மலர்விழி முத்துவின் உதவியுடன் விருதுநகர் மாவட்டத்தில் குப்பை வங்கி (Garbage Bank) என்ற அமைப்பை உருவாக்கி கழிவு மேலாண்மை விழிப்புணர்வை ஊட்டி நடத்தி வருகிறார்.
அவரது குப்பை வங்கியின் செயல்பாடுதான் என்ன? தினமும் ஒரு பகுதி என நகரெங்கும் ஒரு பாட்டரி வண்டி குப்பைகளைத் திரட்டச் செல்கிறது. வீடு தேடி வந்து குப்பை வாங்குவது என்கிற விஷயம் எங்கும் உள்ளதுதான். ஆனால் குப்பைகளைக் கணக்கிட்டுக் குப்பை கொட்டியவர்களுக்குப் பணமும் கிடைக்கிறது என்பதில்தான் இவர்களின் இயக்கம் வித்தியாசப்படுகிறது.
Add Comment