ராக்கெட் அறிவியல், நியூரோ சயின்ஸ், குவாண்டம் தியரி இவை யாவும் கடினமானவை. அதேவேளையில் மிகவும் பயன் மிக்கவை. கடினமானதும் பயன் மிக்கதுமாக இருப்பவையே அறிவியலாளர்களின் விருப்பத் தேர்வு.
இந்த வரிசையில் குவாண்டம் கம்ப்யூட்டர்களும் நிச்சயம் உண்டு. சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் குவாண்டம் கம்ப்யூட்டர்களை மீண்டும் பேசு பொருளாக்கியுள்ளன.
கூகுளின் குவாண்டம் கம்ப்யூட்டர் அதிவிரைவானது. எவ்வளவு வேகம் என்றால் கற்பனைக்கெட்டாத வேகம். இன்றைய அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர்கள் நாற்பத்து ஏழு வருடங்கள் எடுத்துக் கொள்ளும் வேலையொன்றை இந்தக் குவாண்டம் கம்ப்யூட்டர் சில வினாடிகளிலேயே முடித்துவிடும் என்கிறது கூகுள்.
Add Comment