Home » மறந்தா மாசி, தட்டினா தை, அசந்தா ஆடி!
திருவிழா

மறந்தா மாசி, தட்டினா தை, அசந்தா ஆடி!

சித்திரை வருடப்பிறப்புக்குப் பிறகு மூன்று மாதங்களுக்குப் பெரிய பண்டிகைகள் எதுவும் கிடையாது. கதிரவன் தன் கரங்களைக் கத்திரி போட்டு வீசி, பின் சூட்டுக்கோல் கொண்டு இறக்கி சுட்டுப் பொரித்த பின் சுழற்றியடிக்கும் காற்றையும் மிதமான மழையையும் கொண்டு வந்து மனதை மகிழ்விக்கும் மாதம் ஆடி.

இந்த மாதத்திற்கு ஆடி என்று பெயர் வந்ததற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ரம்பை, ஊர்வசி, மேனகையைப் போல ஒரு தேவ மங்கையின் பெயர் ஆடி. அவள் சிவபெருமானிடம் பெரும்பக்தி கொண்டவள். ஒரு முறை பார்வதி தேவி தவம் செய்து கொண்டிருக்கும்போது, ஆடி பாம்பு உருவமாக மாறி கயிலாயத்திற்குள் நுழைந்து விடுகிறாள். பின்னர் பார்வதி போல வடிவத்தை மாற்றி சிவபெருமானை நெருங்கினாள். கண்மூடி இருந்த சிவனின் தொண்டையில் ஒருவித கசப்புச் சுவை தோன்றியது.

கண்களைத் திறந்தவுடன் அருகில் நிற்பது பார்வதியின் ரூபமாகத் தெரிந்தாலும் அது அவள் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறார். தன் சூலாயுதத்தை ஆடியை நோக்கி நீட்டுகிறார். அதிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை நிஜ உருவத்திற்கு மாற்றுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!