Home » மகிந்த ராஜபக்சேவும் ‘மற்றும் சிலரு’ம்
உலகம்

மகிந்த ராஜபக்சேவும் ‘மற்றும் சிலரு’ம்

கடந்த வருடம் இதே காலப்பகுதிகளில் கோட்டாபய ராஜபக்சே இலங்கை மக்கள் புரட்சிக்குப் பயந்து ஜனாதிபதி மாளிகையின் பின்கதவு வழியாகக் கொழும்புத் துறைமுகத்திற்கு ஓடி அங்கிருந்து விமானப்படைத் தளத்திற்குப் போய் ஒளிந்திருந்து, மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று சுற்றிவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்து சேர்ந்தது ஒன்றும் மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்குப் புதிய விஷயங்கள் அல்ல. இலங்கைப் பொருளாதாரப் பேரழிவின் நவீன வேந்தன் அவர். வாட் வரி எனப்படும் அரச வருமானத்தைப் பாதியாய்க் குறைத்தமை, ஒரே ராத்திரியில் செயற்கைப் பசளைகளை முற்றாய்த் தடை செய்தமை போன்ற அவரது பாடாவதிப் பொருளாதாரக் கொள்கைகள் எவ்வளவு தூரத்திற்கு இத்தேசத்தைச் சீரழித்து திவால் என்னும் பொன்னாடையைப் போர்த்தின என்பதைப் பல தடவைகள் விலாவாரியாய் எழுதி இருக்கிறோம். இங்கே சோகம் என்னவென்றால் ஆர்ப்பாட்டங்களின் போது அரச சொத்துக்களுக்குச் சிறு சேதம் விளைவித்தால் கூட மூன்று முதல் ஐந்து வருட சிறைத் தண்டனையும், ஓய்வொழிச்சல் இல்லாத வழக்குகளும் புனையப்படும் தேசத்தில் கோட்டாபய ராஜபக்சே போன்ற பொருளாதாரக் குற்றவாளிகள் எந்தவொரு தண்டனையுமில்லாமல் முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகளையும், சொகுசுகளையும் அனுபவித்தவாறு வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!