ஈரோட்டில் பத்து ரூபாய்க்குத் தரமான உணவு வழங்குகிறது ஒரு உணவகம். முப்பது ரூபாய் இருந்தால் போதும். மூன்று வேளையும் திருப்தியாகச் சாப்பிட்டு விடலாம்.
ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய ஐந்து ஊர்களிலும் இருக்கின்றன ஆற்றல் உணவகங்கள்.
பத்து ரூபாய்க்கு உணவு என்றால் உணவினுடைய தரம் எப்படி இருக்கிறது? உணவகத்தை எப்படிப் பராமரிக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு அப்படியே காலைச் சிற்றுண்டியையும் சாப்பிட்டுவிட்டு வந்தோம்.
ஈரோட்டில் பிரப் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு அருகில் உள்ளது ஆற்றல் உணவகம். பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவு. அரசு பொது மருத்துவமனையிலிருந்து ஐநூறு மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. உணவகத்திற்கு முன்பு நாற்பது இருசக்கர வாகனங்கள் நிறுத்துமளவு இடம் இருக்கிறது. உணவகத்தில் சுமார் ஐம்பது பேர் அமர்ந்தும் நின்று கொண்டும் சாப்பிடும் அளவுக்கு இடவசதி இருக்கிறது.
பத்து ரூபாய்க்கு உணவு வழங்கும் ஓட்டல் அதிசயம்தான்! உணவும் சுவையாக இருப்பதாகச் சொல்கிறீர்கள். அந்த பக்கம் வருகையில் ஒரு முறை சென்று சுவைத்து பார்க்க வேண்டும். நல்லதொரு உணவக அறிமுகத்திற்கு நன்றி!