எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிக் ஹங்கர்ஃபோர்ட் சிகிச்சை பலனின்றி மரணத்தைத் தழுவியிருக்கிறார். நட்மெக் முதலீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் இவர். தன் மகள் எலிசபெத் பெயரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.
நட்மெக் ஒரு முதலீட்டு ஆலோசனை நிறுவனம். இணையம் வழியாகச் செயல்படுவது. வாடிக்கையாளர் முதலீடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதால்தான் வேலையை விட்டுவிட்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார் நிக். சில அடிப்படைக் கேள்விகள் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கேற்ற முதலீட்டு திட்டத்தைப் பரிந்துரைக்கிறார்கள் இவர்கள். இந்தச் செயலி வென்ச்சர் கேபிடலிஸ்ட்களால் 45 தடவைக்கு மேல் நிராகரிக்கப்பட்டது. தொடங்கிய பிறகு, பத்தாண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகச் செயல்படுகிறது இந்நிறுவனம். பெரியளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது நட்மெக். தற்போது இந்நிறுவனம் ஜே.பி.மார்கன் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.
Add Comment