ஆப்கனை ஆளும் தாலிபன் அரசின் நவீன திருவிளையாடல்களின் அடுத்தக் காட்சி அரங்கேறியிருக்கிறது. இம்முறை பெண்கள், கல்வி, வேலைவாய்ப்பு, அழகு நிலையங்கள் எல்லாம் இல்லை. புத்தகங்கள்.
ஆம். படிக்காதே. எழுதாதே. பதிப்பிக்காதே. புத்தகத் துறையை ஓர் அபாயகரமான துறையாக அவர்கள் கருத ஆரம்பித்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.
விளைவு, புத்தக வெளியீட்டாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றிருக்கிறார்கள். தாலிபன்கள் வெளியிட விரும்பும் அவர்களின் சித்தாந்தத்திற்கு உட்பட்ட புத்தகங்கள் என்றால் சரி… உடனே வெளிவந்துவிடுகிறது. மற்ற எதுவானாலும் தூக்கிக் கிடப்பில் போடு. ஒரு விஷயம். அரசு அனுமதியின்றி அங்கே புத்தகம் வெளியிட முடியாது. இப்போது அந்த அனுமதிக்குத்தான் ஆயிரத்தெட்டு அக்கப்போர்.
வெளியீட்டிற்கான அனுமதியில் தாமதம், தணிக்கையில் நிறுத்தி வைப்பது ஆகியவை ஆப்கானிஸ்தானின் புத்தகத் துறையைப் பெரிய அளவில் பாதிக்கும் பிரச்சினைகள்.
Add Comment