ஹைப்ரிடோமா
சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த ஃபேஜ் தெரபி ஒரு சிறந்த நம்பிக்கை அளிக்கக்கூடிய தெரபி என்றாலும் நாம் அதை மட்டுமே நம்பியிருக்க இயலாது. ஏனெனில் ஃபேஜ்-வைரசுகளுக்கு எதிராகவும் பாக்டீரியாக்கள் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளக்கூடும். அது மட்டுமன்றி ஃபேஜ் தெரபி பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தக் கூடியது. இதர நுண்கிருமிகளான வைரஸ், பூஞ்சை போன்றவற்றிற்கு எதிராக இதனைப் பயன்படுத்த முடியாது.
தற்போது நாம் சந்தித்து வரும் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் தன்மைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் புதிய அணுகுமுறைகள் நிச்சயம் தேவை. நல்வாய்ப்பாக உயிரியல் தொழில்நுட்பம் அதற்கான பல்வேறு வழிமுறைகளை வழங்கி வருகிறது. அதிலொன்றுதான் இம்யூனோதெரபி (Immunotherapy). இந்த இம்யூனோதெரபி சிகிச்சை முறை ஃபேஜ் சிகிச்சை முறையினைப் போன்று ஆய்வளவில் மட்டுமல்லாமல் நடைமுறைப் பயன்பாட்டிலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
Add Comment