Home » சங்கேதங்களும் குறியீடுகளும்
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

சங்கேதங்களும் குறியீடுகளும்

விளாதிமீர் நபகோவ்

விளாதிமீர் நபகோவ்
தமிழில்: சி. மோகன்


குணப்படுத்த முடியாத அளவுக்கு மனப்பிறழ்வு கொண்டிருந்த  இளைஞனுக்கு, பிறந்தநாள் பரிசாக என்ன கொண்டு செல்வதென்ற பிரச்சனையை, இவ்வளவு நாள் நடந்தது போலவே,   நான்காவது வருடமாக இம்முறையும் அவர்கள் எதிர்கொண்டார்கள். அவனுக்கென்று ஆசைகள் ஏதுமில்லை. மனித உற்பத்திப் பொருள்கள், அவனைப் பொறுத்தவரை சொறி சிரங்கு போன்று தீங்கானவை. அவற்றின் முனைப்பான  கொடிய செயல் அவனால் மட்டுமே உணரக்கூடியது;அல்லது முழுமையான மனநிறைவை அளிக்கக்கூடிய எவ்வித வசதிகளும் அவனுடைய அரூப உலகில் பிரயோஜனமற்றவை. அவனுக்கு எரிச்சலூட்டக்கூடிய அல்லது அச்சமூட்டக்கூடிய பல பொருள்களை (உதாரணமாக, சிறு இயந்திரச் சாதனங்கள் அனைத்தும் அவன் உலகில் விலக்கப்பட்டவை) புறமொதுக்கிவிட்டு,  சுவைமிக்கதும், தீங்கற்றதுமான ஒன்றை அவர்கள் தேர்வு செய்தார்கள் – பத்து சிறிய ஜாடிகளில் பத்து வகையான பழ ஜெல்லிகள் அடங்கிய கூடை.

அவன் பிறந்தபோது, அவர்களுக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியிருந்தன. அதன்பிறகு  இருபது வருடங்கள் கடந்துவிட்டன. அவர்கள் இப்போது மிகவும் வயோதிகர்களாகிவிட்டார்கள். அவளுடைய மங்கிய நரைத்த  முடி அசட்டையாக முடிச்சிடப்பட்டிருந்தது. அவள் மலினமான கருப்பு ஆடைகளை அணிந்திருந்தாள். அவளுடைய வயதிலுள்ள மற்ற பெண்களைப் போலில்லாமல் (அவளுடைய அண்டை வீட்டுக்காரியான திருமதி ஸோலின் முகம் முழுவதும் இளம்சிவப்பு வண்ணமும் வெளிர் ஊதா நிறமும் கொண்ட பூச்சிருக்கும்; அவளுடைய தொப்பி ஓடைக்கரைப் கொத்துப் பூக்களால் அமைந்திருக்கும்) இளவேனிற்கால வெளிச்சத்தில் குறைகள் தென்படும் விதத்தில் அலங்காரமற்ற, வெளுத்த முகத்தோடு அவளிருந்தாள். தன்னுடைய பழைய கிராமத்தில் வெற்றிகரமான சிறந்த வியாபாரியாக விளங்கிய அவளுடைய கணவர், இப்போது நியூயார்க்கில் முற்றிலும் தன்னுடைய சகோதரன் ஐசக்கின் – கிட்டத்தட்ட நாற்பது வருட காலம் ஒரு அசல் அமெரிக்கனாக வாழ்ந்துகொண்டிருப்பவர் – தயவில் இருந்தார். அவர்கள் எப்போதாவதுதான் ஐசக்கைப் பார்த்தார்கள்; அவருக்கு ‘பிரின்ஸ்’ என்று செல்லப் பெயர் வைத்திருந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!