சமூக வலைத்தளங்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் நல்ல செய்திகளைவிடப் பரபரப்பான செய்திகள், காட்டுத்தீயாகப் பரவுகின்றன. அது மணிப்பூர் காணொளியானாலும் சரி, இலான் மஸ்க்கின் ஒசெம்பிக் (Ozempic) பயன்பாடானாலும் சரி அல்லது எங்கேனும் யார் தலையையாவது யாராவது தீவிரவாதத்தில் வெட்டிய காணொளியானாலும் சரி… எப்போதேனும் சில நல்ல அரிய இசைக் கோர்வைகள், நடன காணொளித் துண்டுகள் பார்க்கக் கிடைப்பதுண்டு.
டிக் டாக் மூலம் பிரபலமான உணவுப்பொருட்களும் உடைகளும் உண்டு. ஆனால் மருந்து கூடவா உண்டு? அதுவும் கருப்புச் சந்தையில் விற்கும் அளவு? அப்படித்தான் சென்ற மாதம் 277 மில்லியன் பேருக்கும் மேலாக ஒசெம்பிக் என்ற ஹாஷ்டாகில் 2017 முதல் நீரிழிவு நோய் குணமாகப் பயன்படும் ஒரு மருந்தைத் திடீரெனப் பிரபலமாக்கியிருக்கிறார்கள்.
அழகு என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? ஆரோக்கியம் என்பதைவிட, அழகாக இருப்பதே முக்கியம் என்பது போல, அழகுசாதனப் பொருட்களும், விளம்பரங்களும் சேர்ந்துகொண்டு ஒரு பெண் இந்த எடையிலும் ஓர் ஆண் இந்த தசை அமைப்பிலும் இருந்தால் இது அழகு என்பதைப் பள்ளிக்குச் செல்லும் முன்னே பதிய வைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள்.
Add Comment