“ட்ரோன் பார்த்திருக்கிறீர்களா?” என்று யாரிடமாவது விசாரித்துப் பாருங்களேன். பெரும்பாலானோர் “ஆம்” என்றுதான் சொல்வார்கள். மிகச் சில வருடங்கள் முன்புவரை சயின்ஸ் பிக்ஷன் ரக ஹாலிவுட் படங்களில் மட்டுமே ட்ரோன்கள் காணக் கிடைத்தன. இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் கூடச் சுற்றிச்சுற்றிப் படமெடுக்கும் ட்ரோன்கள் பரவலாகி விட்டன.
படமெடுக்க மட்டுமல்ல ட்ரோன்கள். இவற்றின் உபயோகம் இன்று பல்வேறு துறைகளிலும் பெருகி விட்டது.
பறப்பதென்பதே சுதந்திரத்தின் படிமம் தானே? எனவே பறக்கும் யாவுமே ஒரு வகையான ஈர்ப்புக் கொண்டுள்ளன. பறவைகள், ஹெலிகாப்டர்கள். தேவதைகள். இன்று இந்தப் பட்டியலில் ட்ரோன்களும் சேர்ந்துள்ளன.
ட்ரோன் என்னும் பெயர் கூடப் பின்னர் வந்ததுதான். ஆளில்லா வான்வெளி வாகனங்கள் (UAVs : Unmanned Aerial Vehicles) என்று தான் இவை முன்னர் அழைக்கப்பட்டன.
சமீபத்தில் எங்கள் ஹிந்து பத்திரிகையின் ரீ பிராண்டிங்`போது சென்னையில் உள்ள vip க்கள் சிலர் வீட்டில் ட்ரொன் மூலம் இந்து விநியோகம் செய்யப்பட்டது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் சுற்றியுள்ள தெருக்களில் அனுமதியின்று பறக்க விடக்கூடாது. சமீபத்தில் இரண்டு மாணவிகள் போட்டோ எடுக்கிறேன் பேர்வழி என்று பறக்க விட்டு கைதாக இருந்தார்கள்.