1998 பிப்ரவரி 14, உலகமே காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போதுதான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. தமிழகம் மறக்க முடியாத சம்பவம். கோவை முழுவதும் பல இடங்களில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. பா.ஜ.க.வின் மிக முக்கியமான தலைவராக இருந்த அத்வானி கோவைக்கு சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக தேர்தல் பரப்புரை செய்ய வர இருந்தார். அவருடைய விமானம் அரை மணி நேரம் தாமதமானது. அதனால் எல்.கே.அத்வானி உயிர் தப்பினார். குண்டு வெடிப்பும், அத்வானியின் வருகையும் ஒருசேர நடக்கவில்லை என்றாலும் இவை ஒன்று சேர்ந்து கோவை மாநகரில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தின.
பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் குறிவைக்கப்பட்டிருந்தன அன்றைக்கு. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள்தான் இலக்கு. அதுவரை கட்டுப்பாடோடு இருந்த கோவை மாநகரம் கலவரமானது. மொத்த நகரமும் இந்துத்துவவாதிகளின் கையில் வந்தது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கோட்டைமேடுப் பகுதி குறி வைக்கப்பட்டு பொது மக்கள் தாக்கப்பட்டனர். எங்கு பார்த்தலும் ஜனங்களின் கூட்டம். உயிர் பயத்தோடு சாலையெங்கும் மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். இறந்தவர்கள் அனைவரும் அப்பாவிப் பொது மக்கள். இந்தப் பிரச்சனைக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்புமில்லை. இந்தக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஐநூறு கோடிகளுக்கும் மேல் பொருளாதாரச் சேதம் ஏற்பட்டது.
Add Comment