Home » மணற்கேணி: கல்விக்கொரு செயலி
கல்வி

மணற்கேணி: கல்விக்கொரு செயலி

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிப் பாடங்களைக் காணொளி வழியாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ‘மணற்கேணி’ என்ற செயலியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை.

ஜூலை மாதம் இருபத்தைந்தாம் தேதி தாம்பரத்தை அடுத்த சேலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இச்செயலியை அறிமுகம் செய்தார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிக் கல்வித்துறையில் பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறோம். அதில் முத்தாய்ப்பான திட்டமாக மணற்கேணி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் மாணவர்கள் எந்தப் பாடத்தையும் விட்டுவிடாமல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், வசதி செய்யப்பட்டு உள்ளது. வெறும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதைக் காட்டிலும் புரிதல் தன்மையோடு அறிவைக் கொண்டு பாடங்களைப் புரிந்து படிக்க வேண்டும். செயலியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மட்டுமில்லாமல் 2டி. 3டி, அனிமேஷனில் அதை விளக்கும் விதமாக வீடியோக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.” என்றார்.

பாடங்களை மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக பாடங்களைப் புரிந்து கற்றுக் கொண்டால் மாணவர்கள் தேர்வு குறித்த பதட்டம் மற்றும் பயத்தை தவிர்க்கலாம். அதற்கு இச்செயலி உதவும் என்கிறது பள்ளிக் கல்வித் துறை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மணற்கேணி செயலி குறித்து இதுவரை அறியவில்லை.10ம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது. விரிவான விளக்கமான கட்டுரைக்கு நன்றி.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!