அது எண்பதுகளின் தொடக்கம். அமெரிக்காவுக்கும் அன்றைய சோவியத்துக்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்து உக்கிரமடையத் தொடங்கிய நேரம். முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர், விண்டோஸ் என்று பல தொழில்நுட்பங்களும் வர ஆரம்பித்த வேளை. பல நாட்டுக்காரர்களும் புதிது புதிதாக என்னென்னவோ கண்டுபிடித்துக்கொண்டிருந்த போது, நம்மாள் ஒருவருக்குத் தீராப் பெருங்கவலை. சரக்குக்கு உகந்த ஒரு தரமான சைட் டிஷ்ஷை உருவாக்க வேண்டும். அது உலகில் வேறெங்கும் இல்லாததாக, அதி உன்னதத் தரம் கொண்டதாக, மறக்கவியலாத ருசியுடன் இருக்க வேண்டும்.
எல்லா வறுவல்களும் எண்ணெயைக் குடிப்பதாகவே உள்ளன. எப்படி மனிதன் சாப்பிடுவது? சரக்குடன் சேர்த்து இந்தக் கருமங்களைச் சாப்பிட்டால், குலுக்கித் திறந்த கோலி சோடா போல உடனே வாந்தி வருகிறது. என்ன செய்வது? என்று தீராத யோசனையில் ஆழ்ந்தார். தனது மனக் குமுறலை நண்பரும் சமையல் கலைஞரும் ஆன குப்பண்ணனிடம் கூறுகிறார்.
அடுப்பங்கரைக்குச் சென்ற குப்பண்ணன், கடாயை வைத்தார். தேங்காய் எண்ணெயைக் கொஞ்சமாக ஊற்றி காய்ந்த மிளகாய் இருப்பதைக் கிள்ளிப் போட்டார். சிறிதளவு மஞ்சள் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கோழிக்கறியை அள்ளிப்போட்டு சில்லு சில்லாய் வெட்டிய தேங்காயை மழை போலத் தூவினார். தண்ணீரே சேர்க்காமல் சிக்கனிலிருந்து வடியும் நீரிலேயே நன்றாக வேக வைத்து எடுத்துக் கொடுத்தார். பாருங்கள்…. சரக்கிற்கு ஹெவன்லி காம்பினேஷனாக அமைந்துவிட்டது. அதற்குப் பள்ளிப்பாளையம் சிக்கன் என ஒரு பெயரையும் வைத்து தனது உணவகத்தில் விற்கத் தொடங்கினார். இது தான் ஜூனியர் குப்பண்ணா ஸ்பெஷல் பள்ளிப்பாளையம் சிக்கன் பிறந்த கதை.
படிக்க நன்றாக இருந்தாலும் நான் சைவ பட்சி என்று கூறிக்கொண்டு…ஹாஸ்யமாக இருந்தாலும் இதன் பனிப்போர் பூர்வ கதை தேங்காய் சில்லு எப்படி சிக்கனோடு ஜெல் ஆகிறதோ அதுபோல் ஜெல் ஆகவில்லை எனவே நினைக்கிறேன்.