தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் இவான், மெக்சிகோவின் யுகடன் தீபகர்ப்பத்தில் புதைந்திருக்கும் புதிய மாயா நகரம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். இவர் இதைக் கண்டுபிடிக்க முப்பது ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார்.
2013-ஆம் ஆண்டு அவரும் அவரது குழுவினரும் சேர்ந்து ஒரு நகரத்தைக் கண்டுபிடித்தனர். இது 8-ஆம் நூற்றாண்டில் 40 ஆயிரம் பேர் வாழ்ந்த ஒரு நகரமாகும். இந்நகரம் ‘சாக்டுன்’ என்ற மழைக்காடுகளால் விழுங்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு வருடத்தில் மேலும் இரண்டு மாயா நகரங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். அவை லகுனிடா மற்றும் தம்சென்.
அவை ஒவ்வொன்றும் பிரமிட் கோயில்கள், பிளாசாக்கள் மற்றும் கலைநயத்தோடு செதுக்கப்பட்ட கல் தூண்களைக் கொண்டிருந்தன. இந்நகரம் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.
இவானின் சமீபத்திய கண்டுபிடிப்பு உலகளாவிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இக்குழு 15 மீட்டரைவிட அதிகமான ஆழத்தில் அமைந்துள்ள ஏராளமான பிரமிட் வடிவ கட்டமைப்புகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவைதான் கைவிடப்பட்ட மாயா நகரத்தின் பழங்கால எச்சங்கள் என்கிறார்கள்.
Add Comment