மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தை விமரிசனம் செய்த குற்றத்துக்காகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தமிழ்நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, மூன்று நாள்களுக்குப் பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார்.
பத்ரி சேஷாத்ரியின் மணிப்பூர் தொடர்பான கருத்துகள் ஏற்கத்தக்கவையல்ல. சிந்திக்கத் தெரிந்த எந்த ஒரு சராசரி மனிதனும் மணிப்பூரில் நடக்கும் அட்டூழியங்கள் மனிதத்தன்மையற்றவை என்றே சொல்வான். இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு மாநிலமே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது; இன்னும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றால் ஆளும் அரசு எந்தக் கட்சியாக இருந்தால் என்ன, யாராக இருந்தால் என்ன? செயல்திறன் அற்றவர்கள் அல்லது கலவர விரும்பிகள் என்கிற முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும். அத்தகைய அரசுக்கு, நிர்வாகத்துக்கு எவ்வகையிலும் ஆதரவுக் குரல் தருவது ஏற்புடையதல்ல.
Add Comment