62 மாற்றம்
நான்காவது சம்பளக் கமிஷனை அறிவிக்கக்கோரி நடந்த மத்திய அரசு ஊழியர்கள் ஊர்வலத்தில், இவன் முஷ்டியை உயர்த்தி எழுப்பிய கோஷம், முன்னடத்திச் சென்றுகொண்டிருந்த பாரம்பரிய இடதுசாரி இயக்கத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த P & T தோழர்கள் சிலரை புதிய குரலாய் இருக்கிறதே, யாரது என்று திரும்பிப் பார்க்க வைத்ததை, கூட வந்துகொண்டிருந்த கனகராஜ்தான் பார்த்தீர்களா என்று கண்களால் காட்டி பெருமிதத்துடன் முறுவலித்தார்.
மறுநாள் ஆபீஸில் மரிய சந்திரா டிஓஎஸ், ‘இவ்வளவு பெரிய தொண்டையை இத்தனை நாளாய் எங்கே வைத்திருந்தீர்கள்’ என்று கண்களை அகட்டிக் கேட்டார்.
எதிலும் கரைந்துபோகாமல் எல்லாவற்றையும் முகர்ந்து பார்த்துப் புரண்டு எழுந்துவந்திருந்த அவன் பின்னணி, அங்கே யாருக்கும் தெரியாததால், அவனுடைய ஜிப்பா ஜோல்னா பையை வைத்து ‘கிறுக்கு’ என எண்ணிக்கொண்டிருந்த ஈரோடு ஆபீஸ், அந்த ஊர்வலத்தில் அவனது தீவிரத்தைக் கண்டு வியப்படைந்ததில் ஆச்சரியமில்லை.
‘நீங்க வந்த நேரம் நல்ல நேரம், பே கமிசன், கலெக்டரேட்டுனு ரெண்டு நல்ல விசயங்களும் ஒண்னா நடக்கப்போகுது’
Add Comment