“வலதுபுறம், 40 டிகிரி. பிட்சும்க்கி, இது உன்னுடைய நேரம்.” கண்முன் இருக்கும் கணினித் திரையைப் பார்த்தே, வழிகாட்டுகிறார் விட்ச். திரையில் ஒரு திறந்த வெளியில் குண்டுவெடித்துக் கரும்புகை மேலெழும்புவது தெரிகிறது. உற்றுப்பார்த்துச் சேதங்களைக் குறித்துக் கொள்கிறார். அடுத்தத் தாக்குதலுக்கு இந்தத் தகவல்கள் உதவும். பாக்மூத்திலிருந்து ஆறு மைல் தூரத்தில் இருக்கும் பதுங்குகுழிக்குள் இருந்து இதைச் செய்கிறார்.
ஓல்கா என்ற பெயருடைய இவர், உக்ரைனின் பெண் இராணுவ வீரர். மோட்டார்ப் படைப்பிரிவின் தளபதி. தரைப்படையினரின் கைக்கடக்கமான இலகுரக சிறு பீரங்கிகள் இவை. சாய்கோணத்தில் குண்டுகளை ஏவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதைத் துல்லியமாக இயக்கத்தான், ஓல்கா முன்னர் கட்டளை கொடுத்துக் கொண்டிருந்தார். தரைப்படையின் பாதுகாவலர் இவர்.
Add Comment