ஒரு தாதிப் பெண் பசியோடு மருத்துவமனையின் சிற்றுண்டிச்சாலைப் பக்கம் போகிறாள். சாக்லேட் ஃபிங்கர்ஸ் ஒரு பெட்டி வாங்கிப் பிரித்து, அவசர அவசரமாகச் சாப்பிடத் தொடங்குகிறாள். திடீரென்று கல்லுப் போல ஏதோ கனக்கிறது. கவனித்துப் பார்த்தால் சாக்லேட்டில் மனித விரல் துண்டு! அதிர்ச்சி, அருவருப்பு எல்லாம் சேர உதறித் தள்ளுகிறாள். மத்திய இலங்கையின் மஹியங்கனை அரச வைத்தியசாலையில் நடந்த உண்மைச் சம்பவம் இது.
அடர் வர்ணத்தில் சாக்லேட்டோடு சாக்லேட்டாகச் சற்றும் உருமாறாமல் அப்படியே இருந்த அந்த விரலின் புகைப்படம் சில நிமிடங்களில் வைரலாகிறது. மிகவும் புகழ் பெற்ற அதன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தாங்கிய உறையின் படத்துடன் சேர்ந்தே ஃபேஸ்புக் முழுக்க வியாபிக்கிறது.
horrific incident well depicted
Thank you!